நிலவு வெளிச்சத்தில் ஒரு நிழல்,
ஜன்னல் கண்ணாடியில் ஒரு காட்சி.
உன் கரம் நீள, என் நினைவு மெல்ல,
தொடுகை இன்றி, உணர்வின் வாசல்.
கனவோ, நினைவோ, எது உண்மை?
நீண்ட நாட்களின் சோகம், பிரிவின் வலிமை.
கண்ணில் காணும் உருவம் மறைந்தாலும்,
நெஞ்சில் வாழும் காதல் குறையாதே.
குளிரும் இரவில், என் நினைவின் முகம்,
உன் இதயத்தில் என்றும் ஒரு சுகம்.
மீண்டும் ஒரு பிறவி, மீண்டும் ஒரு சந்திப்பு,
அன்பே, நாம் சேரும் நாள் எப்போ?
நிலவின் ஒளியில் நிழலாடும் உருவம்,
ஜன்னல் கண்ணாடியில் நீயே என் கனவு.
கரம் நீள, கலங்கும் என் உள்ளம்,
தொடுவானில் கலந்திட்ட உன்னைக் காண.
காதலின் மாயமா, காலத்தின் கோலமா?
நீ இல்லாத நாளில், என் வாழ்வில் சூன்யமா.
பார்வையில் நீ மறைந்தாலும், என் சுவாசத்தில் நீயே,
காலங்கள் கடந்தும், என் அன்பே, உனக்காகவே நான்
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: நிலவு
previous post