நிழல்கள்… நிஜங்கள் காட்டிடும் பிம்பங்களே
அழகாய் வடிவங்கள் பல கொண்டு
வெளிப்படும் நிழல் உருவங்கள் நிஜங்கள்
காட்டிலும் அழகு மட்டுமன்றி வியப்பூட்டும்
கலைக் களஞ்சியங்களே…. நிழற் கருவிகள்
பிடித்துச் சேகரித்திடும் புகைப்படங்கள் யாவும்
காலங்கள் கடந்தும் ரசிக்கத் தூண்டும்
ஞாபகச் சின்னங்களே….
நாபா.மீரா
