நீல வானில் நீந்தும் பறவை
தூக்கமின்றி பறக்கிறது சுகமாய்
நாணலில் கட்டிய கனவுகள்
வீசும் காற்றில் மகிழ்ச்சியாய்
கைலொரு நூல் பிடிப்போடு
ஆகாய வீதியில் பறந்தாலும்
சிறகுகள் தேடும் அவனது
நெஞ்சிலோர் உருகும் வலி
உழைப்பின் உன்னதம் காக்க
உயரப் பறக்கும் போராளியாக
தன்னைத் தானே தாங்கி,
தள்ளி, தூக்கிப் பறக்கிறான்
வானத்தில் பறக்கும் சுழல்
வாழ்க்கையின் ஒரு பாடமே
ஏறும், இறங்கும், காயம் படும்
ஆனாலும் பறக்க வேண்டுமென…
தனக்கே தெரியாத திசையில்
இலக்கை நோக்கி பயணித்து
வீழ்வதும் தோல்வியில்லை என
மனப்பிணையோடு நாள்தோறும் பறக்கிறான்
விண்ணில் பறக்கும் பட்டமாய்…
நா.பத்மாவதி
கொரட்டூர்
படம் பார்த்து கவி: நீல
previous post
