பச்சை வனத்தின் இதயம் வழியே, இருகரம் கோர்த்து நாம் நடப்போம் இனிதே. மரங்களின் அரவணைப்பில் மனங்கள் மயங்கும், காதல் கீதம் காற்றினில் கலந்து எங்கும் இயங்கும்.
இலைகளின் ஊஞ்சலில் ஆடும் நினைவுகள், ஒளியும் நிழலும் பின்னிப் பிணைந்த ஓவியங்கள். காலத்தின் தடைகள் கரைந்து போகும் இங்கே, நம் காதல் காவியம் நிலைக்கும் என்றெங்கே.
வானவில்லின் வண்ணங்கள் தோன்றுதே வழியில், வசந்தத்தின் வாசம் வீசுதே மெல்ல. உன் கண்களில் நான் காணும் பேரன்பு, என்றென்றும் நிலைத்திடும் தெய்வீக அற்புதம்.
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: பச்சை
previous post
