பச்சை பசேலென
வளமையும் செழுமையும்
இச்சை இலாதோரையும்
இச்சிக்க செய்திடுமே
இச்சகத்திலே
எச்சமேதும் இலாதே
துச்சமாக்கியே
உச்சமிதுவெனவே
மிச்சமும் இன்றியே
நச்சாக்கியே
உயர்வென்றே உயிரளிப்பவற்றை உயிர் அழிக்கின்றோமே…!
துயரன்றோ!!
தேடுகின்றோம் தழையழித்தே தலைமுறையினையே..
நிகரில்லா நிலத்தின்
செழுமை நீ(க்)ங்கியபின்
நிசத்திலோ
நினைவிலோ
நின்றிடுமோ!? பசுமையுமே…!
பசிக்குணவும் வசிப்பிடமும்
இயல்பழிந்தே இயங்கிடுமோ?!
ரசித்திடலாம்
செயற்கை அறிதிறன் வழியிதனை!!
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
படம் பார்த்து கவி: பச்சை
previous post
