படுக்கையில் நீயும், கண்கள் மூடியே,
மருத்துவமனை அறையில் தனிமையில் வாடியே.
குளுக்கோஸ் ஏதும் ஏறவில்லை உனக்கு,
மாறாக ஏதோ தொல்லை உனக்கு.?
முகநூல் ஒரு பக்கம்..
இன்ஸ்டாகிராம் ஒரு பக்கம் தொங்குகிறது,..
யூடியூப் பாட்டில் மறுபக்கம் ஏங்குகிறது.
டிக்டாக் பாட்டிலும் கூடவே சேர்ந்து,..
உன் நிம்மதியை எல்லாம் போக்கி மறைந்து…
இதெல்லாம் தான் உன்னை படுக்கையில் தள்ளியது,
மாய உலகில் நீ அதிகம் சென்றது…
உன் பொன்னான நேரத்தை வீணடித்தாய்,
சமூக வலைகளில் மூழ்கித் தவித்தாய்…
இப்போது படு, அமைதியாக கொஞ்சம் ஓய்வெடு,
மெய் உலகில் வா, இனியாவது விழித்தெழு.
உன் ஆரோக்கியமே முக்கியம் என்பதை உணர்ந்துகொள்!
இ.டி. ஹேமமாலினி
படம் பார்த்து கவி: படுக்கையில்
previous post