பட்டங்கள் மட்டும் போதாதே,
படிப்பதுடன் நில்லாதே.
திறன்பட வாழ வேண்டும்,
திறமைகளை வளர்க்க வேண்டும்.
காலம் மாறும் உலகினிலே,
கற்றதுடன் நில்லாதே.
புதியன கற்று புத்துயிர் பெறு,
புதுமைகளை படைத்து நீயும் வாழு.
வெற்றிகள் தானாய் வராதே,
முயற்சியின்றி எதுவும் நிலைக்காதே.
திறம்பட சிந்தி, திறம்பட செயல்படு,
உலகில் நீயும் உயர பறந்து வாழு.
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: பட்டங்கள்
previous post
