பட்டங்கள் வெறும் காகிதம் அல்ல,
மாமியார் வீட்டில் அடமானம் வைக்க.
அது பெண்ணின் அறிவுப் புரட்சி,
ஆழ்ந்த அறிவின் ஒளிச்சுடர்.
நியாயமற்ற அநீதிகள் நடந்தால்,
நிமிர்ந்து நின்று வீறு கொண்டு எழு.
அச்சமில்லை அச்சமில்லை என,
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் திகழ்.
உலகை உற்று நோக்கி, உண்மை கண்டறி,
உரிமைக்காக ஓங்கி குரல் கொடு.
தடைகளை உடைத்து, தடம்பதித்து,
தன்னம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து வாழு.
நீயே இந்த உலகின் ஒளி,
நீயே நாளைய தலைமுறை.
உன் கையில் உலகம் சுழல,
உயர்ந்திட வாழ்த்துக்கள் பல!
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: பட்டங்கள்
previous post
