படம் பார்த்து கவி: பனிக்கரடி

by admin 3
3 views

பனிக்கரடி தனிமையில் நிற்கும் காட்சி
பனிச்சிகர இயற்கையின்‌ அழகு மாட்சி
உச்சிக்குச் செல்ல எனக்கு ஆசை
உச்சிக்குச் செல்ல இணையருக்கும் ஆசை
துணிந்து செல்லப் புறப்பட்டோம் நாங்கள்
அருகில் வரத் துவங்கியது பனிக்கரடி
இருவர் முகத்திலும் மகிழ்ச்சி பூத்தது
ஒருவரும் இல்லா சிகரம் சிறப்பது
நேருக்கு நேர் வந்தது பனிக்கரடி
பேருக்கு ஏற்ப அச்சுறுத்தவில்லை கரடி
எங்கள் கைகளை நீட்டினோம்‌ அதனிடம்
பனிக்கரடி பாயவும் கனவு கலைந்தது

…பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!