பனியில் பிறந்த வெண்மையும்
நீலமும் கலந்த மேகமாய்
பனி உறைந்தப் பாதம்
பனி மலைகளின் மைந்தனாய்
நிமிர்ந்த நம்பிக்கை நடையோடு
நாசியில் உறைந்த வாசத்தோடு
உணவுத் தேடும் உள்ளம்
கோரமான உண்மைக் கோபம்
கொண்டாலும் நெருப்பற்ற தீயாய்
கண்களில் காதல் கனிவோடு
தீண்ட முடியாது ஆயினும்…
தாயாய்க் குட்டியைத் தாங்கும்
ஆனந்தம் தேடும் அதனுள்
அழகிய அமைதி தங்கும்
மனிதன் போல் வாழும் சோகமும் அதற்குண்டு
விண்ணை நோக்கும் அந்த வெண்ணிற உயிரை
விலங்காக எண்ணாதே விலங்குக்கும் உரிமை உண்டு
நா.பத்மாவதி
கொரட்டூர்
படம் பார்த்து கவி: பனியில்
previous post