பரிமாணங்கள் பல பூண்டு வலம்
வரும் பெண்ணவள் வானத்துத் தாரகைகள்
சூழ பூமிக்கு வந்த தேவதையன்றோ?
தேடி அவளைப் பாலியல் வதம்
செய்தல் பாவமென உணரா மாக்கள்
ஆணின் தகாத இச்சையால் முளைத்த
கணக்கிலடங்கா அநாதைக் குழந்தைகள் காப்பகங்கள்
தாயே அறியா சூல்கள் கொடுமையிலும்
கொடுமை.. மண்ணின் மீது மழைத்துளிகள்
அமிலமாய் மாறியதோ? தேவதைகள் சபிக்கப்பட்டனரோ?
நாபா.மீரா
படம் பார்த்து கவி: பரிமாணங்கள்
previous post