பூட்டது பூட்டியிருக்கையிலே கதவதுவும் திறவாதே
திறவுகோல் திறந்துவிடில் கடவொன்று கிடைத்திடுமே
கிடைத்திட்ட புதுக்கடவினிலே புத்துலகை காணலாகுமே
காணாத காட்சியினை கண்டிடவே காத்திருந்தேன்
காத்திருந்த காரணத்தால் கதவதுவும் திறந்திடுமோ
திறவுகோலிலா பூட்டதனால் மனக்கதவினையே அடைத்துவிடில்
அடைத்துவைத்த அன்பெலாமும் அமிழ்ந்தமிழ்ந்தே அழிந்திடுமே
அழிந்துவிடும் முன்னதாக மனமுவந்தே திறந்துவிடில்
திறம்படவே
திளைத்திடலாம் திவ்விய அனபினிலே….
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
படம் பார்த்து கவி: பூட்டது
previous post
