பொன் நகையில் இல்லை பெண்ணின் பெருமை,
பொழுதுபோக்காய் போனது அந்தச் சடங்கு!
அவள் விரல் தேடட்டும் பேனாவை
அவள் வாய் பேசட்டும் உரிமைதனை!
கல்வி ஒன்றே அவளுக்கான கேடயம்,
கல்லாத மூடத்தனம் அறியாமை!
பட்டங்கள் பெற்று, சட்டங்கள் இயற்றி,
பாரினில் தலை நிமிரட்டும் எங்கள் பெண்!
எதற்கு இந்த வெறும் தங்கம்?
எதிர்காலமே அவள் கையில்!
புன்னகை போதும், புவி ஆளட்டும்,
பொன் நகை வேண்டாம், புதுமை படைக்கட்டும்!
இ.டி.ஹேமமாலினி
சமூக ஆர்வலர்.
படம் பார்த்து கவி: பொன்
previous post