மங்கலமாம் மஞ்சள் கயிறென்றார்,
மகளின் கழுத்தில் மூச்சுக்கயிற்றாய் முடிந்தது!
சீர்சென்று சேரட்டும் என்றார்கள்,
ஜீவன் போனதென்ன, அந்த சீதனத்தால்?
ஆசைப்பட்டது மாப்பிள்ளையின் குடும்பம்,
ஆசை அறுந்ததென்ன, அந்தப் பெண்ணுக்கே!
வெறும் பொருளாய் பார்த்தவர் மத்தியில்,
உயிர் விலையாய் போனது, வெந்தழலில்!
மானம் காத்ததென மதித்த மாமிசம்,
மரணக் குழியாய் மாறியது இன்று!
எப்போது மாறுமோ இச்சமூகம்?
பெண்ணுயிர் போகும் பரிதவிப்புக்கு!
இ.டி.ஹேமமாலினி
சமூக ஆர்வலர்