மழலையின் முகத்தில் மலர்ந்த மகிழ்ச்சியாக…
மங்கையர் மனம் பொங்கும் அறிவிப்பு!!
மாடவீதியில் உள்ள மாடிக் கடையில் …
ஆடித் தள்ளுபடி அதிரடி விற்பனை.
வண்ண வண்ண ரங்கோலியாக மின்னும் …
சிகப்பும், நீலமும், பச்சையுமாக ஜொலிக்கும் …
நீரில் மிதக்கும் மீன், மான், அன்னம், கொக்கென…
படர்ந்திருக்கும் பட்டு புடவைகள்
பாதி விலையில்
பருத்திப் பட்டில் பட்டங்கள் பறக்க…
பருத்திக்கும் உண்டு, ஆடித் தள்ளுபடி
முகில் போல குறைந்த விலை
மாரியாக பொழியும் தள்ளுபடி
மறந்து போன நிறங்களைத் தேடி தேடி…
தள்ளுபடியில் வாங்குவது புடவைகளா?
தளர்வடைந்த தாய்மார்களின்
வாழ்க்கை உற்சாகத்தையா?
என யோசிக்க வைக்கும்
கடை வாசலில் பிரதிபலிக்கும்
முகங்களின் மனச் சாயல்கள்
நா.பத்மாவதி
கொரட்டூர்
படம் பார்த்து கவி: மழலையின்
previous post
