மழையில் நனைந்து வெயிலில் வெந்து,
மண்ணில் உருண்ட என்னைத் தூக்கிய
சிறுவன் கைமேல் பிறந்தேன்
ஒரு பந்தாக…
உணர்ந்தேன்…
நான் விளையாட்டுக்கே பிறந்தவன்
மணல் நிரம்பிய மைதானங்களில் காற்றாய்
என் பாய்ச்சல்
மென்மையான பாதங்களால் உருண்டேன் ஆரவாரத்தோடு…
ஒரு பாதத்தால் அடிபட்டு
மற்றொரு பாதத்தால் உந்தப்பட்டு
நிறைந்த கூட்டத்தில்
மைதானம் முழுவதும் சுழன்றாலும்…
எதுவும் எனக்கு சொந்தமில்லை
வெற்றிக்காக விழுந்த ஒவ்வொரு அடியிலும்
பாசமும், வேதனையும் துளிர்க்கும்
கோல் விழும் போது கொண்டாடும் குரல்களின் மெளன சாட்சியாக நான்
ஒருநாள் என் தோல் அழிந்து
என் ஓட்டம் மெதுவாகும்
புதிய பந்து மையத்தை அடையும்
ஆனாலும் என் பயணத்தில்
ஒவ்வொரு அடியிலும், சுழற்சியிலும்
ஒரு விளையாட்டு வீரனின் கனவுக்கு துணை இருந்தேன் என்ற பெருமையோடு நான் ஓய்வு கொள்கிறேன்…
நா.பத்மாவதி
கொரட்டூர்
படம் பார்த்து கவி: மழையில்
previous post
