மாயாஜால உருவம்,
ஒளிரும் வண்ணத்தில்,
இருளில் இருந்து வெளிப்படும் ஒரு வினோத முகம்!
வசீகரிக்கும் சிரிப்பு,
அதன் முகத்தில் தவழும் ஒரு மர்ம புன்னகை.
வெளிர் நீல ஒளியில் மின்னும் கண்கள்,
கையில் புகையிலை சுருளுடன்,
புகை வளையங்கள் கலக்கும் காற்றில்,
ரகசியங்களைச் சுமந்து,
காட்சிக்கு அசைவூட்டும் ஒரு மர்ம புண்ணகை உதிக்கிறது.
திவ்யாஸ்ரீதர்