மினுமினுக்கும் பொன் வடிவமாய்…
மனதை மயக்கும் பேரழகாய்…
ஆசைப் பெருங்கடலில் அலையெனப் பொங்கும்…
“வேண்டும் வேண்டும்” என்ற பேராசைப் பித்து…
கண்கவர் நகையாய், கனவுலகக் காட்சியாய்…
கறைபடிந்த மனதுக்குத் தாரக மந்திரமாய்…
‘பேய் ஆசை’யெனும் பாழ்விதை ஊன்றி…
பரிதவித்துப் போனதொரு
இளம் உயிர்.
அழகெனும் ஓவியமாய், அமுதமெனப் பொழியும்…
மங்கையின் வாழ்வு, மாசற்ற தென்றலாய்…
ஆசைப் பேயின் அகோரப் பிடியில்…
அழிந்து போனதோர் ஆத்மாவின் அமைதி…
இருநூறு பவுனின் மினுமினுக்கும் மோகத்தில்…
எளிதாய் உதிர்ந்ததோர் இளம் உயிர்ப் புன்னகை…
பெற்றோர் கண்ணீரில் கரைந்து போன வானம்…
உறவினர் நெஞ்சில் உறைந்த பெரும் வலி…
திரும்புமா அந்தத் தியாகத்தின் உயிர்?…
மீளுமா மனதின் மாசு படிந்த பாதை?…
பேராசையின் கொடும் விளைவு இதுவோ…
மஞ்சள் பூசும் பொன் நகையாய்…
மனதின் ஆசை மழுங்கிப் போன வாழ்வு!
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: மினுமினுக்கும்
previous post