மின்னும் கைகளில் மெஹந்தியின் அழகு,
மாறாத நேசத்தின் மௌனக் கவிதை.
அருகினில் நீயெனும் சுகமான அணைப்பு,
அழகிய வாழ்வின் ஆழமான பிணைப்பு.
இதயத்தின் ஓசைகள் ஒன்றாய் ஒலிக்கும்,
இணைந்த கரங்கள் நிழலெனக் கவியும்.
உலகமே மறைய, நீயும் நானும் மட்டும்,
உள்ளங்கள் கலக்கும் அன்பின் கோட்டை.
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: மின்னும்
previous post