மெல்லிய கரங்கள் அவனது கழுத்தை சூழ்ந்திட,
அந்தப் பிடிப்பில் ஓர் புதுமையான சுகம் மெல்லப் படர்ந்திட,
வார்த்தைகள் தேவையில்லை, இரு விழிகள் பேசியது காதல் மொழி…
அவன் தோளில் சாய்ந்த நொடியில், உலகத்தையே மறந்த நங்கையாய் அவள் பரிணமித்தாள்…
அன்பின் கதவுகள் திறந்தது ஒரு சப்தமுமில்லாமல், மனதின் ஆழத்தில் மட்டும் ஒலித்தது அந்த இனிய ராகம்.
அந்த ஸ்பரிசத்தில் கரைந்தாள் அவள், அவனோ அவளைத் தாங்கும் தூணானான்…
அவர்களின் மௌனமான உரையாடலில் காதலின் ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருந்தன…
ஒருவருக்கொருவர் புகலிடமாக, அந்த நொடி அழியாத காவியமாக மாறியது.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: மெல்லிய
previous post