படம் பார்த்து கவி: வண்ண

by admin 3
6 views

வண்ண சாக்பீஸ்  (ஒரு சிறுவனின் சிந்தனை…)
வண்ண வண்ண சாகபீஸால்
வகை வகையான ஓவியங்கள்
கவிஞர்களின் கற்பனைக் கவிதைகள்
கரும் பலகையில் படம் 
போடும்  ஓவியனாக நீ….
பச்சை  பசுமை வரைய,
வெண்மை அமைதியாக நடக்க,
மஞ்சள் மங்கலத்தின் நிறமாக,
சிவப்பு கதிர்கள் தோரணமாக,
நீலம் நீண்ட  கடலாக…
ஒவ்வொரு வண்ணமும் காட்டும்
வேறு வேறுப் பாதை
புத்தகத்தில் உலகம் கற்பேன்
சின்ன சாகபீஸில் கரும்பலகையில்
ஒளிவளியாய் கனவுகள் படைப்பேன்
இந்த மாயாஜால வாழ்க்கையில்
பலகையில் வண்ணக் கோலம்
தீட்டும் ஆசையில் வண்ண
சாக்பீஸோடு காத்திருக்கும் நான்

நா.பத்மாவதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!