வண்ண வண்ண பட்டுச் சேலை,
வர்ணஜாலம் காட்டுதம்மா!
பட்டு நூலில் தரையில் இணைந்து,
கம்பீரமாய் ஜொலிக்குதம்மா!
வடிவம் பல கண்டு,
தனித்துவமாய் மின்னதம்மா!
உணர்வுகளில் கலந்த,
உன்னதப் படைப்பு இதுவம்மா !
பெண்களின் அழகினை,
நேர்த்தியாய் எடுத்துரைக்கும்…
இந்த ஜவுளிக்கடை அலமாரியம்மா!
பல உடைகள் போட்டி போட்டுக் கொண்டு,
புதுமையில் இருக்குதம்மா…
இருப்பினும் பழமை இங்கு கம்பீரம் காட்டுதம்மா!
மனதின் அடுக்குகளை தூண்டும்,
கண்கவர் கலை இதுவம்மா!
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: வண்ண
previous post