வானம் பூமிக்குத் தீட்டிய வண்ணமே,
மரகதப் புல்லில் மலர்ந்த விண்மீன்களே!
கூட்டமாய்ச் சேர்ந்து,
அழகிய புன்னகை பூக்கிறீர்கள்!
உங்கள் நறுமணம் காற்றோடு பரவி,
தொலைவில் இருப்போரையும் வசீகரிக்கிறதே!
இயற்கையின் கொடையில் உதித்த அதிசயமே, நீ!
குறுகிய கால வாழ்வானாலும்,
குறையேதும் இல்லாத பேரன்பு கொண்டவளே!
மென்மையான இதழ்கள் நாரில் கோர்க்கப்பட,
மாலைகளாய்த் தோளில் தவழ,
ஆடம்பரம் அற்ற
உன் அழகே,
அலங்காரத்தின் உச்சம்!
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: வானம்
previous post