வானவில் ஓவியமாக வந்தவளின்
அன்புத் தூறலில் நனைந்துத்
தழுவும் மெல்லியப் பூந்தென்றலாய்
நழுவிய மனதும் நினைவும்…
புன்னகைப் பூக்களோடு
கவி மலராக
வநதவளைப் பார்த்து …
மலையில் பூத்தது குறிஞ்சி
காட்டில் முறுவலித்தது முல்லை
வயலில் வளரந்திணை மருதம்
கடலில் முத்துக்களோடு நெய்தல்
காடும் மலையுமில்லா பாலை
ஐந்திணையும் பொழிந்த
அன்பில் சிரிப்போடும்
செல்லச் சினத்தோடும்
புன்னகைக்கும் தாரகையை
எண்ணி எண்ணி
வறண்டநிலம் பூத்ததம்மா…
வனமெலலாம் செழித்ததம்மா…
பூங்காற்றாய் வந்தாளம்மா…
புன்னகையோடு வந்தவளைப்
புவியெங்கும் தேடினேனம்மா…
எங்கே என் தேவதை என்று …..
நா.பத்மாவதி
கொரட்டூர்
படம் பார்த்து கவி: வானவில்
previous post
