வானில் பறக்கும் பட்டங்கள் போல்,
விண்ணை நோக்கி விரியும் கனவுகள்.
முடிந்ததோர் பயணத்தின் சுவடுகள்,
புதிய பாதைக்கு வழி திறக்கும் தடங்கள்.
கைகூடும் காலம் இதுவே,
கனவுகள் மெய்ப்படும் தருணம்.
வெற்றி முழக்கங்கள் ஒலிக்க,
வாழ்வில் புதிய அியாயம் எழுத.
கற்ற கல்வி கலங்கரை விளக்காய்,
உள்ளத்தில் ஒளிவிடும் ஞானம்.
உலகம் உங்கள் காலடியில்,
உயரப் பறக்க சிறகுகள் விரிக்கும்.
அன்பு நிறைந்த வாழ்த்துக்களுடன்!
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: வானில்
previous post
