வாழ்க்கை அழகுதான் அட்டையில் எழுதிக்
காட்டிட மட்டுமல்ல உள்ளபடியே நிஜத்திலும் தான்
கற்களின் தீண்டலில் சற்றே குழம்பினாலும்
சட்டெனத் தெளிந்திடும் குட்டை போலே
வருவதும் போவதும் மனிதர்கள் மட்டுமே
நான் நிற்காமல் ஓடிக் கொண்டே
இருப்பேன் என இறுமாப்புடன் ஓடும்
நீரோடை போலே….நான் உங்கள் தாய்
நீங்கள் உதைத்தாலும் மிதித்தாலும் தாங்குவேனே
எனப் பரந்து விரிந்து நிற்கும்
பூமியைப் போலே நம்மைத் தாங்கிச்
சுமக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி கூறி
உள்ளத் தெளிவுடன் பயணிக்க வாழ்க்கை நிச்சயம் நித்தமும் அழகோ அழகுதான்…..
நாபா.மீரா
படம் பார்த்து கவி: வாழ்க்கை
previous post