விதியின் பிடியில்
கதியற்ற போது
வண்ணமோ வடிவோ விருப்பத்தை உதறி
சீலை விலைச்சீட்டை விலக்கி விழி விரித்தவள்
வருடங்கள் கடந்து வலக்கை ஊன்றி நானெழ
விலை பார்க்காதே என சொல்லியும்
இருநூற்றுப் புடவை இரெண்டெடுத்து
மழலையாய் சிரிக்கிறாள்
குறுக்கிய கையின் சுவடோ
ஆசைப் பூக்களை
உதிர்த்த வயதோ
பிள்ளை உழைப்பென்ற சூதானமோ அறியேன்
எனக்காய் உழைத்து ஓய்ந்து போனவள் தனக்காய் எதைத் தான் தேடுவாள் இவ்வுலகில்!
புனிதா பார்த்திபன்
படம் பார்த்து கவி: விதியின்
previous post
