விழியின் மேலே வண்ணக் கோலம்..
இமையின் ஓரம் புது உலகம்
வானவில்லின் சாயமெல்லாம் வந்து சேருதடி..
கண் நிழலின் ஜாலத்திலே மயங்குகிறேனடி..
சின்னஞ்சிறு தூரிகையால் சித்திரம் வரைகிறாயா?
ஒவ்வொரு நிறத்திலும் ஒரு கதை சொல்கிறாயே..
நவீனப் பெண்களின் இந்த ஒப்பனை அலங்காரம்..
கண்களாலே ஆயிரம் கவிதை பாடுகிறார்கள்..
புதுப்புது நிறங்களின் சங்கமம் இங்கே,.
தன்னம்பிக்கை ஒளி வீசும் ஒவ்வொரு அசைவிலும்..
காலத்தின் மாற்றத்தில் கலையின் புது வடிவம்,
கண் நிழலின் அழகில் காணும் ஆனந்தம்!
இ.டி. ஹேமமாலினி
படம் பார்த்து கவி: விழியின்
previous post
