வெண்ணிலவு வானில் மின்ன, என் நிலவோ
காற்றோடு கரைந்தது மெல்ல…
கானல் நீராய், கலைந்தது கனவு
உருவம் இல்லா ஓர் உயிர் என்னை தேடி
அலைந்தது, தெரிந்தது, கண்ணீரோடு…
வாழ்ந்த வாழ்வின் சுவடுகள் எல்லாம்
நெஞ்சில் பதிந்து, வேதனை தந்தது…
பிரிவின் துயரை ஏற்காத நெஞ்சம்
துடித்தது, துவண்டது, கண்ணீரோடு…
அவள் ஆன்மா அவனோடு நிற்க,
அறியா மனது தனிமையில் வாட …
இது காதல் பிரிவா?
அல்லது கடந்த காலமா?
விடை தெரியா வினா இது…
இரவின் அமைதி, நிலவின் ஒளி…
அவள் இல்லாமல் சுகிக்கவில்லை,
எங்கும் தனிமையே… எதிலும் தனிமையே…
எல்லாம்
தனிமையே.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: வெண்ணிலவு
previous post