வெள்ளை நிறத்தில்
சிவப்பு மலர்கள் பூத்த ஆடை,
தையல் இயந்திரம் அருகே அமைதி…
பக்கத்தில் கண்ணாடி குவளை ஒன்றில்,
சிவப்பின் திரவம், என்னவென்று அறியேன்.
ஊசியின் ஓசை ஓய்ந்திருக்கலாம்,
பூக்களின் மென்மை நிலவலாம்.
சிவப்பு திரவம் மௌன சாட்சி,
அமைதியான ஒரு சிறு காட்சி.
சிவப்பின் திரவம் பழச்சாறோ?
மாதுளைச் சாறாய் இனித்திடுமோ?
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: வெள்ளை
previous post