தும்பிக்கை தூக்கி வானைத் தொடும்
தேன் சுவைக்கும் தாகம் கொண்டது
கால்கள் மண்ணை தழுவி நடக்கும்
கானகத்தின் காவலன் அதுவே
பெரிய கண்கள் ஆழம் சொல்லும்
பழங்கால கதைகளை பாடும்
தோல் சாம்பல் நிறம், வலிமை பொங்கும்
தனிமை நிறைந்த காட்டின் அரசன்
குட்டிகள் துள்ளி ஆடும் போது
குளிர்ச்சியான தண்ணீர் தெளிக்கும்
காற்றுடன் சேர்ந்து முழக்கம் எழும்
காடெங்கும் இசை பரவும்
மனிதன் வந்தால் பயப்படாது
மனம் திறந்து நட்பு கொள்ளும்
ஆனால் கொடுமை செய்தால் கோபம் கொள்ளும்
அடக்க முடியாத சக்தி அதில்!
ஆதூரி யாழ்..
