தோற்றத்தில் கொடூரன் என்றாலும்,
இதயம் மென்மையானது உன்.
உன்னைத் தொட்டால் கிழிக்கும் என்றாலும்,
உன்னை நேசிக்கத் தோன்றுகிறது.
காட்டில் வளர்ந்தாலும்,
மனதில் பூக்களை வளர்க்கிறாய்.
காயங்களை ஏற்படுத்தினாலும்,
வாழ்க்கையின் பாடத்தை சொல்கிறாய்.
உன்னைப் பார்க்கும் போதெல்லாம்,
என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.
என்னில் எத்தனை முட்கள் இருக்கின்றன?
என்னில் எத்தனை மலர்கள் மறைகின்றன?
முள் என்றாலே வலி என்று நினைக்கிறோம்,
ஆனால் உன்னைப் போலவே,
சில வலிகள் நம்மை வலுப்படுத்துகின்றன.
சில வலிகள் நம்மை வளர்க்கின்றன.
ஆதூரி யாழ்
