எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன்
தேர்வு செய்த படம்: படம் 31
எங்கிருந்தோ காற்றில் ‘மாங் குயிலே பூங்குயிலே பாட்டு ஒன்னு கேளு’ என்ற பாடல் வரிகள் சுண்டி இழுக்க அமுதன் பெண்ணின் இனிய குரலைக் கேட்டவன் அவள் முகத்தை பார்க்கும் ஆவலில் நடந்தான்.
கொடைக்கானல் அது பகுதியில் ஒரு கிராமம்.
ஒரு பெண் முகத்தை மூடி இருந்தாள். அமுதனின் காலடி ஓசை கேட்டு அவள் அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தாள்.
அவளை பின் தொடர்ந்தான். சிறிது நேரத்தில் அவள் எங்கோ மறைந்து விட்டாள்.
ஒரு முறை அவள் திரும்பிப் பார்த்த போது அவள் கண்கள் அழகாக அவனை ‘வா…வா ..’ என்று சொல்வது போல் இருந்தது.
திரும்ப தங்கியிருந்த விடுதிக்கு வந்து விட்டான். அலைபேசி அழைத்தது. அலுவலக நண்பர்கள் “எங்க இருக்கிற?
தங்கியிருக்கும் இருப்பிடத்தின் வரை படத்தை அனுப்பினான்.
அடுத்த நாள் உயிர் நண்பர்கள் நான்கு பேரும் ஜோதியில் ஐக்கியமாயினர்.
“தொடர்ந்து மூன்று நாட்கள் லீவு. நீ மட்டும் எங்களை விட்டு விட்டு இங்க வந்தா விடுவமா? எப்படி?”
அன்று அதே குரல். அமுதன் பின் தொடர்ந்து சென்றான். அவனைத் தொடர்ந்து அவன் நண்பர்கள்.”எங்கடா போனா அவ?”
“டேய்.. ஏதாவது பேயா இருக்கும். வேண்டாம் நாம திரும்ப போயிடலாம். “
“ஏண்டா இப்படி பயந்து சாகற?”
கொஞ்ச தூரத்தில் ஒரு வீடு தெரிந்தது.
“மெதுவா வாங்க. சத்தம் செய்யாம.”
வீட்டின் பின் வழியாகச் சென்றனர். அங்கு ஒரு இருபது வயது பெண் கைகள் கட்டப்பட்ட நிலையில்.
அருகில் ஹோம குண்டம். எதிரில் உக்ரமான காளி படம்.
பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அவர்கள் செயல் இழந்தனர். எத்தனை நேரம் மயக்கமாக இருந்தனரோ தெரியாது.
காதருகில் ஒரு குரல் “முட்டாள்களா..! அந்த பொண்ணை காப்பாத்துவீங்கணு நினைச்சு உங்களை வரவைச்சா உங்களை காப்பாற்ற வச்சுட்டீங்களே.. எழுந்திருங்க.”
நால்வரும் கண் திறந்து பார்த்தனர். கைகளை கட்டி போட்டு இருந்தாங்க.
“நான் சொல்றதை கவனமா கேளுங்க. அந்த பொண்ணு கையில ஏதோ மந்திர கயிறு இருக்கு. நீங்க முகத்தை மூடிக்கிட்டு அந்த கயிறை அறுத்து ஹோம குண்டத்தில் போடுங்க. அந்த மந்திரவாதி தூங்கும் போது அவன் கிட்ட இருக்கிற மந்திர கோலை ஒடிச்சு நெருப்பில் போடுங்க.
ஜாக்கிரதையாக செய்யுங்க.”
ஒவ்வொருத்தர் கைய் கட்டையும் பிரித்து விடுவித்தா அந்த குரலுக்கு சொந்தக்காரி
பின்னாடி திரும்பிப் பார்த்தா அவ இல்லை.
மந்திர வாதிக்கு நல்ல தூக்கம். சத்தம் இல்லாமல் கிட்ட போய் அந்த மந்திர கழியை உடைத்து நெருப்பில் போட்டு விட்டனர். அவன் வாயைப் பொத்தி கை, கால்களை கட்டி விட்டு, அந்த பெண்ணின் கையில் இருந்த கயிறை அறுத்து ஹோம குண்டத்தில் போட்டாச்சு.
அந்த பெண்ணைத் தூக்கிக் கொண்டு அவங்க தங்கி இருந்த இடத்திற்கு வந்த பிறகு போலீஸுக்கு போன் செய்து வரவழைத்தனர்.
அந்த பெண் மயக்கம் தெளிந்து அழுது கொண்டே கூறினாள். என் அக்காவும் நானும் டீ எஸ்டேட்ல் வேலை செய்யறோம். பண்ணை வீட்டில் வேலை இருக்கு என்று இங்க கூட்டிட்டு வந்து எங்க அக்காவை….”
பேச முடியாமல் அழ ஆரம்பித்தாள்.
“அவளை மந்திர வாதி பலி கொடுக்கிறேன் என்று மயங்க வைத்து அந்த வீட்டில் கீழே பாதாள அறையில் வைத்து உறுப்புகளை எடுத்து வித்துட்டாங்க. அடுத்த பலி நான். அதற்குள் இவர்கள் வந்து என்னைக் காப்பாற்றி விட்டனர்.”
போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ஒரு ஆபரேஷன் தியேட்டர் இயங்கிக் கொண்டு இருந்தது. அனைவரையும் கைது செய்தனர். பாவம் மருத்துவர்கள். அவர்களுக்கு போதை மருந்து கொடுத்து அடிமைகளாக வைத்து இருந்தனர்.
நால்வரும் நடந்ததைக் கூறினர்.” யார் அந்த பெண்? எங்க அவங்க? எங்களுக்கும் தெரியாது. ஒரு தடவை போட்டோ எடுத்தேன்” என்று அமுதன் காட்டினான்.
“ஐயோ.. அது என் இறந்த அக்கா..!”
என்றதும் அனைவரும் உறைந்து விட்டனர்
முற்றும்!..
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.