கடந்த இரவோடு கவலை இறைவனடியோட
அனலியவனின் அம்புக்கீற்று அல்லினை அடித்தோட்ட
கவிழ்ந்திருந்த நிலைத்திணையாவும்
நிமிர்ந்து வான்வணக்கமிட
ஆசையள்ளி அனுபவமள்ளி
அடி வைக்கும் மானிடத் திரளிற்கு
பதுங்கிக்கிடந்த பட்சியினங்கள் பாடிப்பறந்து பறைசாற்றுகின்றன
எத்திக்கிலும் வானுண்டு எட்டிச்செல்ல வழியுண்டென.
புனிதா பார்த்திபன்