நிர்மலமான நேரமிது!
புள்ளினங்களுடன்,
எல்லா உயிரினமும்,
ஓய்வெடுக்கும் காலமிது!
களைப்பை துறந்து,
உழைப்பை மறந்து, உறங்கும் பொழுதிது!
பொன்விடியலின் முன் காலை நேரமதில், வைரம்போர்த்திய புல்வெளியின் ரம்மியத்தில், சிக்குண்டு தேனருந்திய வண்டொன்று,
துயில் களைந்து, தவம் துறந்து, சிறகுவிரித்து, நிலாப் பெண்ணின் உறவு துறந்து, வெய்யோனோடு கைகோர்க்கும்,
காலத்தை வேண்டி
இரவின் மடியில் புன்னகையுடன் காத்திருக்கும் பொழுதிது!!
சுஜாதா.