பிரபஞ்ச இரவுக்குள் ஏதொவொன்று இருக்கிறது..
இருளில் மலரும் நிழலாய் வெண்ணிலா..
பகலவனிடம் நாணம் கொண்ட மேதினி..
இரவின் மடியில் மோகங்கொண்ட கொண்டல்முகில்கள்..
நீலவானின் இருள் போர்வையில் நீந்தும் விண்மீன்கள்..
இப்படியான இரவின் கவிதைகள் எனக்குப் பிடித்திருக்கிறது..
✍️அனுஷாடேவிட்.