மொழி அறியா மழலை மொழி
முத்தமிழும் சொற்சேர்க்கை
இல்லாமலே கைகோர்க்க
புரியாத அனைத்தையும்
புன்னகையாய் தெரிவிக்க
பூரித்துப் போய்
வச்சகண் எடுக்காமல்
பிரமித்து நின்று
சுமந்தவள் சுகமாய்
மனதிற்குள் செலுத்தும்
மௌன மொழி
மழலையின் மொழியஃது
உணர்வு மொழி
இடைவெளி இல்லா
இசை மொழி!
ஆதி தனபால்
