அவளின் கன்னக்கதுப்பின் அழகில் மோகம்
கொண்ட விண்மீன் ஒன்று கீழிறங்கி
முத்தமிட்டு தழுவிச் சென்றது.., அதில்
வெட்கப்பட்டு உண்டான கன்னக்குழியில் மழைத்துளிகள்
பட்டு மோட்சம் அடைந்தன ஜொலித்து..
காதோரம் தவழ்ந்த ஒற்றைமுடி கன்னம்
தழுவக் காற்று பொறாமைக்கொண்டு வீசியெறிந்தது..
மென் இதழ்களும் சிவக்கின்றன கன்னத்தின்
ஒவ்வொரு முத்தத்திலும் பேரானந்தம் கொண்டு..
அன்பு தளும்பும் மெல்லிசைமொழி கன்னமே…!
✍🏻அனுஷாடேவிட்.
வாரம் நாலு கவி: அவளின்
previous post