காட்டாறு வழியில் நேசத்தைக் கொட்டி/
அசையும் தென்றலென வரவைப் புதுப்பித்து/
இலக்கணம் மாறாமல் உரையாடும் தலைவா/
துடிக்கும் இதழ்களைப் படிக்கவும் பேரமோ/
சிவந்த கன்னங்களைச் சுவைக்கவும் சிந்தனையோ/
மழலையின் சிரிப்பு தாயின் முத்தத்தில்/
மங்கையின் நாணம் வேங்கையின் முத்திரையில்/
இல்லறம் விழுங்கும் இதயங்களின் ஓசைகள்/
தலைவியின் நோய் தீர்க்கும் முத்தங்கள்/
முத்தாரம் முறைத்தாலும் முத்தங்களை வழங்கிடு/
ஹரிமாலா
வாரம் நாலு கவி: காட்ட்று
previous post

 
