பாடம் படிப்பிக்குமிடமே பள்ளிக்கூடமாம்
ஏடும் எழுத்துமா கற்பிக்கின்றன
படும் பாடெல்லாமும் படிப்பினையன்றோ
பட்டறியும் பகர்ந்திடுமே பலப்பலவாய்
பாருல(கே)கும் பள்ளிக்கூடம் தானன்றோ
பார்ப்பவையும் கேட்பவையும்
படிப்பினைகளாகிடுமே
படிப்பதனை பெற்றிடுவோம் அனைத்திலுமே
துடிப்பதனை உடல் நிறுத்தும்வரை
துரத்திவரும் தீயவைகள் தகர்த்திட்டே
தரமுயர்ந்து தலைநிமிர கற்றிடுவோமெப்போதுமே..
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: பாடம்
previous post