மின்னும் அழகு உன் கன்னம்
மாசு பரு இல்லா கன்னம்
அதில் சிரிக்கும் போது விழும்
பள்ளம் அதில் நான் மெல்ல
விழுந்தேன் என்பதே நிதர்சனத்தின் உண்மை
காற்றில் வீசும் சுகந்தம் போல
உன் கன்னம் மின்னும் வெண்மை
வாசனை மரத்தில் பூக்கின்ற மலரை
போல் உன் சிரிப்பு,
நிலவின்
ஒளியில் ஒளிரும் உன் முகம்
உஷா முத்துராமன்