முதற்கரு முடிச்சவிழ்க்கப்படா
தொடக்கம்
தொப்புள் கொடிக்குள்
விருட்சமாகி
உதரமெனும் நிலத்தினுள்
உதிரவிதை
ஐயிரு திங்களில்
அதிசயமாய்
உடலுக்குள்ளுயிர் உயிருக்குள்ளுடல் சுமந்து
முறமதில் சுற்றிச் சுழல
உலகாளுமினமாய் மானுடன்
ஆவணப்படுத்தப்பட
மூலமாய் நிற்பதெது
அதிசயமே!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: முதற்கரு
previous post