வெற்றிகளும் தோல்விகளும்

by admin 3
88 views

பசுமை போர்த்திய இனங்கள்
புதுமையில் இனிப்பதில்லை கசப்பதில்லை
பழமையில் நம் மனக் கண்களிலிருந்தும்
தானாகவே நிறம் மாறும் வரை….!

நிறம் மாறிய பின்னும் ஒளியலைகள்
நிறம் மாறா திரும்பவும் இனம் தேடுவதில்லை
நிறமாக வான் நிலம் வெளுக்கின்ற பின்னும் ….!

மண்ணில் இறங்குவதில்லை என்றும்
விண்ணில் தோன்றிய வைரங்கள்
மீண்டும் மீண்டும் பிரகாசிக்கும் வரை ….!

ஊடே தன்னை ஈன்று சுமந்தவர்களை
கீழே இறக்குவதில்லை பூமித்தாய்
மேலே மேலும் எறிந்த பின்னும் …!

சாய்ந்த தோல்விகள் எல்லாம்
ஓய்ந்த பின்னே மறைவதில்லை
மாய்ந்து வெற்றிக் கனியை பிடிக்கும்வரை ….!

ஏற்றுக் கொள் மனமே!
தோல்வியை வெற்றியாக
சத்தியம்
தர்மம்
நீதி
என்றும் சாய்ந்துவிடுவதில்லை
கோபுரக் கலசங்கள் போல ….!

ஜெய ராஜரெத்தினம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!