10 வரி போட்டிக் கதை: ஆஹா

by admin 1
40 views

எழுத்தாளர்: எஸ். முத்துக்குமார் 

நான்கு வருடங்களுக்கு முன், டவுன்ஹாலில் நடந்த அந்த கான்செர்ட் ல் தான் லலித் எனக்கு அறிமுகமானான்.  உச்சஸ்தாயியில் ஏறி லாவகமாக இறங்கிய அந்த தருணத்தில் இருவருமே கைகளை உயர்த்தி ‘ஆஹா’ என்று கொண்டாடியபோது நண்பர்களானோம். சாக்ஸபோன் கச்சேரி அது..கதிரி கோபால்நாத், கென்னி ஜி, சுப்பலட்சுமி என்று நிறைய அலசுவோம்.. லலித் நன்றாக வாசிப்பான்.  அவன் வாசிப்பில் கண்கள் கலங்கி விடும். ஒரு மழை நாளில் மூன்று மணி நேரம் தொடர்ந்து வாசித்தான்..வாசித்து முடிக்கும் போது அழுதான்.  நானும் தான்.  அது மகிழ்ச்சியா, தூக்கமா, இரண்டும் கலந்த உணர்வா தெரியவில்லை….ஊரை விட்டு லலித் சென்றபோது இந்த சாக்ஸபோனை என்னிடம் தந்து விட்டுப் போனான். இதோ, இதை கைகளால் வருடும் போது மெல்லிய இசை ஆரம்பித்து, மரங்கள், மலைகளை ஊடுருவி வானம் தொட்டு..மீண்டும் காதருகே ரகசியமாக..எனது உடலும் உள்ளமும் சிலிர்க்கிறது…

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/12351-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!