எழுதியவர்: மா.வேல்முருகன்
சொல்: ஊஞ்சல்
பொக்கை வாய் காட்டி சிரித்த போது ஊர் திருவிழாவில் என் உறவுகளின் முதுகில் பயணித்த அவளை கொஞ்சம் தூரத்திலிருந்து கவனித்தேன். என் மீது எப்போது பயணிப்பாள் எனக் காத்திருந்தேன்.
என்னை கண்டும் காணாமல் விலகிச் சென்றாள். வயதில் பெரியவர்கள் என்னைத் தேடி நாடி ஓடி வந்து என் மீது கிடந்து நான் சென்ற திக்கு எல்லாம் திரிந்து உடல் புரண்டு மகிழ்ச்சியின் எல்லையில் கத்தி கூப்பாடு போட்டவர்கள் மத்தியில் என்னை கவனிக்காது சென்ற இவளை நினைத்து நினைத்து என் மனம் புளுங்கி தவித்தது.
என்றாவது ஒருநாள் இவள் எனக்காக காத்திருக்க வேண்டும். என் மீது ஏறி பயணப்பட வேண்டும். பரவசத்தின் உச்சிக்கு பறந்து செல்ல வேண்டும் என உள்ளுக்குள் நினைத்தேன்.
காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றார்கள் நானும் காத்திருந்தேன்.
இதோ புத்தாண்டு.இந்த ஆண்டாவது என் ஆசை நிறைவேறுமா. என் கனவு கன்னி என்னருகே வருவாளா
என ஏங்கித் தவித்தேன்.
ஏக்கத்துடன் ஊஞ்சல்.
முற்றும்.
📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.