எழுதியவர்: அ. கௌரி சங்கர்
சொல்: ஊஞ்சல்
பாரதியார் பூங்காவில் இருந்ததோ நான்கு ஊஞ்சல்கள். விடுமுறை என்பதால், ஊஞ்சல் விளையாடுவதற்கு போட்டிகள் அதிகம் இருந்தன. ஊஞ்சல் ஒன்றுக்கு 5 குழந்தைகள் வரிசையில் காத்திருந்தன.
மூன்று ஊஞ்சல்களில் குழந்தைகள் மாற்றி மாற்றி விளையாடியதால், வரிசையில் நின்ற குழந்தைகளுக்கு ஆடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துக்கொண்டே இருந்தது.
நான்காவது ஊஞ்சலில் ஆடிக்கொண்டு இருந்த 11 வயது அசால்ட் ஆறுமுகம்.. ஆறு நிமிடங்களாகியும் இறங்குவதாக இல்லை. வரிசையில் நின்ற சிறுமிகள் – ஹேமா, சுகன்யா, தான்யா, ரேவதி மற்றும் கணேசன் விரக்தியடைந்தனர். கணேசன் ஒரு யுக்தி செய்தான்.
“ஆறுமுகம், புறந்த புள்ளை கூட உட்கார்ந்து ஆடும். ஏறி நிக்கணும். இரண்டு கைகளையும் விட்டு விட்டு ஆடணும். நீ பெரிய இவன் அப்படின்னா செஞ்சி காட்டு பாப்போம்,.”
கடுப்பாகிய ஆறுமுகம் விருட்டென்று ஊஞ்சலில் ஏறி நின்று இரண்டு கைகளையும் விரித்து காட்டினான். அடுத்த வினாடியில், அவன் அடித்ததோ பலடி. முன்பக்கமாக விழுந்த அவனுக்கு முகம் எல்லாம் செம்மண்.
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.