100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: தொலைத்த பொருள்

by admin 2
154 views

எழுதியவர்: அ. கௌரி சங்கர்

சொல்: துடைப்பம்

திடீர் என்று வாணி சத்தம் போடத்தொடங்கினாள். என்னங்க; தோடு காணாம போயிடுச்சி.
கணினியில் மூழ்கியிருந்த கண்ணன், தலையை திருப்பி சொன்னான். – இதுவே வேலையா போச்சு. நல்லா தேடி பாரு. ஒரு பொருளை கண்ட இடத்திலேயும் வைக்க வேண்டியது. காணல காணலன்னு ஒப்பாரி வைக்கவேண்டியது. தோடை அலமாரியில் தானே வைப்பேனுங்க. இரண்டு நிமிஷம் டைம் எடுத்துக்கோ. யோசி. தோடை கடைசியா எப்போது கழட்டி வைத்தாய் என்று பாரு. அந்த இடத்தில தேடு.
கிச்சனில் தொலைத்த பொருள் எப்படி கேட் வாசலுக்கு போகும்? இரண்டு நிமிஷம் கழிந்தது.
நேத்து reception போயிட்டு நைட் 10 மணிக்கு வந்தேனா; சேலையை கழட்டிவிட்டு நைட்டிக்கு மாறினேனா; தோடை கழட்டி தலையணை மேல் வெச்சேனா; பிறகு உங்களுக்கு பால் கொண்டு வந்தேனா; தலையணை கீழே இருந்த போர்வையை உதறினேனா;
கண்ணன் வந்தான் – நான் சொல்றேன். துடைப்பத்தை எடுத்து ரூமை பெருக்கினாயா?
சட்டென்று வாணி சாத்திவைக்கப்பட்டு இருந்த துடைப்பத்தை பார்க்க, அதன் உச்சியில் தோடு ஒட்டிக்கொண்டு இருந்தது.

முற்றும்.

📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!