எழுதியவர்: நா.பத்மாவதி
சொல்: விரல்
ஒரு ஊரில் கட்டை விரல் உயரம் கொண்ட கண்ணன் வாழ்ந்து வந்தான். அவனது பெற்றோர் அவனால் பெருங்கவலை கொண்டனர்.
அவனது உருவம் கண்டு ஊரிலுள்ளவர்கள் அவனை கிண்டல் செய்தனர். கண்ணன் எதையும் கண்டு கொள்ளாமல் தன்னால் முடிந்த உதவிகளைஅனைவருக்கும் செய்து வந்தான்.
ஒரு நாள், ஊரில் ஒரு பெரிய ஆற்றுப் பாலத்தைப் புதுப்பிக்க வேலைகள் நடந்து கொண்டி இருந்தது. பெரியவர்கள்,சிறியவர்கள், பெண்கள் என பலரும் தங்களால் இயன்ற பணிகளை செய்து கொண்டு இருந்தனர். கண்ணனும் “நானும் உதவணும்னு ஆசையா இருக்கு” என்று தன் விருப்பத்தை. “நீ என்ன செய்யப் போகிறாய்? உன்னால என்ன பண்ண முடியும்” என எல்லோரும் கேலி பேசினர் .
என்னால் ஏன் முடியாது என்று திடமான உறுதியோடு கண்ணன் தனது சிறிய உடலால் குறுக்கே இருக்க வேண்டிய குச்சிகளை ஊன்ற உதவினான். அவன் செய்த வேலைகளை வியப்பாக பார்த்தவர்களிடம் அவன், “உடல் உயரம் விட மனத்திற்கான உயரம் தான் முக்கியம்” என்று சொன்னான்.
மனதின் உயரம் தான் உண்மையான உயரம்.அந்த வார்த்தைகளை கேட்டு எல்லோரும் சிந்தித்தனர்.
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.