எழுதியவர்: நா.பா.மீரா
சொல்: ஊஞ்சல்
பேபி கம் ,நாம பார்க்குக்குப் போய் ஊஞ்சல் ஆடிட்டு வரலாம். கமலி ஆர்வம் ததும்பத் துள்ளிக் குதித்து ரஞ்சித்துடன் கிளம்பினாள்.
ரஞ்சித் நியூஜெர்சியிலிருந்து ஒரு மாத விடுமுறையில் வந்திருந்தான் .சதாசர்வகாலமும் அவன் கமலியுடனே சுற்றிக்கொண்டிருக்க, குடும்பத்தினர் முகத்தின் கடுப்பை அகத்தில் மறைத்தனர்.
ரஞ்சித் டியர், நானும் இன்னிக்கு உங்ககூட பார்க்குக்கு வர்றேனே, என்று ஏக்கம் தொனிக்கும் குரலில் கேட்ட அத்தை மகள் நிரஞ்ஜனாவை, சாரி டியர், ஒன்லி நானும், பேபியும் மட்டும்தான்.
கண் கலங்கிய கமலியை அணைத்து, ஓ பேபி அழக்கூடாது. அடுத்தமுறை நா வர்றச்ச திரும்பவும் பார்க்குக்குப் போய் ஊஞ்சலாடலாம் சரியா? உனக்குன்னு ஸ்பெஷலா ஒரு மரஊஞ்சல் ஆர்டர் பண்ணியிருக்கேன் . ரெண்டு நாள்லே வந்துரும்.
அவனை வழியனுப்பக் கமலியுடன் ஏர்போர்ட்டுக்கு வந்திருந்த ரஞ்சனாவை அணைத்து, சாரி டியர், அடுத்த முறை நா வர்றச்ச நம்ம கல்யாணம் , அப்புறம் நீதான் என் கூடவே இருக்கப்போறியே .
ரஞ்சனாவும், கமலிப்பாட்டியும் உற்சாகமாகக் கையசைத்து விடைகொடுத்தனர்.
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.