எழுதியவர்: நா.பா.மீரா
சொல்: துடைப்பம்
நம்மள மட்டும் இப்படி ஏதோ தீண்டத் தகாத ஆளுங்க மாதிரி மூலையில சாத்தி வச்சிருக்காங்களே , ஒரே பீலிங்கா இருக்கு. உனக்குக் கொஞ்சம் கூட வருத்தமாயில்லையா என்று எதிர்மூலையில் சாத்தப்பட்டிருந்த துடப்பத்தைப் பார்த்துக் கேட்கிறது , அப்பொழுதுதான் வேலைக்காரி உபயத்தால் அழுத்திப் பிழிந்து காய வைக்கப்பட்ட மாப்.
அதோ பாரு, தொலைக்காட்சிப் பெட்டில சொல்றது கேட்குதா, ‘இருப்பிடம் வைகுந்தம்னு ..தொடப்பம் சொல்கிறது.
இருந்தாலும் நேரம் காலம் பார்க்காம இந்த வீடுங்க, தெருக்கள் ,கோயில் எல்லா இடங்களையும் சுத்தம் பண்ணித் தேஞ்சு ஓஞ்சு போறோமே . தங்க காரியத்தையெல்லாம் சாதிச்சிக்கிட்டு தூக்கிப் போட்டுருவாங்க . சே .. கொஞ்சம் கூட நன்றியுணர்ச்சியே தெரியாத ஜனங்க ..
ஏன் புலம்பி ஓய்ஞ்சு போறியோ தெரியல . கடமையைச் செய் ,பலனை எதிர்பாராதேங்கற கீதோபதேசம் நமக்கும் பொருந்தும்தானே?
இந்த உலகத்துக்கு சுத்தம்கிற உன்னதமான பணியைச் செய்ய நாம பயன்படறோம்னு சந்தோஷப்படுவோம் .
‘யாரு சொன்னா விளக்கமாத்துக்குப் பட்டுக்குஞ்சலமான்னு’, உனக்கு பட்டு சால்வையே போர்த்தலாம், உற்சாகமாகச் சொன்னது மாப்.
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.